சுடச்சுட

  

  பெண்களை விமர்சித்த  விவகாரம்: பாண்டியா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்

  By DIN  |   Published on : 21st April 2019 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt4

  டிவி நிகழ்ச்சியில் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ மத்தியஸ்தர் டி.கே. ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.
  கடந்த ஜனவரி மாதம் தனியார் டிவி ஒன்றில் நடைபெற்ற காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட இருவரும் பெண்கள் மற்றும் நடிகைகள் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினர்.
  சஸ்பெண்ட், நிபந்தனையற்ற மன்னிப்பு: இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய கேப்டன் விராட் கோலி உள்பட பல்வேறு தரப்பினர் பாண்டியா-ராகுலை கடுமையாக கண்டித்தனர். சமூக வலைதளங்களிலும் இருவரையும் பலர் சாடினர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து 2 பேரையும் நாடு திரும்புமாறு பிசிசிஐ உத்தரவிட்டது. மேலும் தற்காலிகமாக சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டனர். இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரி கடிதம் அளித்தனர்.
  மத்தியஸ்தர் விசாரணை: பின்னர் இப்பிரச்னை குறித்து பிசிசிஐ சிஓஏ உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. மத்தியஸ்தரை நியமிக்கப்படும்படி மனு தாக்கல் செய்தது.
  பாண்டியா-ராகுல் பிரச்னை மீது விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் முடிவை நிறுத்தி வைத்தது. இதையடுத்து இருவரும் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்று ஆடி வந்தனர். இதற்கிடையே ஓய்வு பெற்ற நீதிபதி டிகே.ஜெயினை பிசிசிஐ மத்தியஸ்தராக உச்சநீதிமன்றம் நியமித்தது. அவர் பாண்டியா-ராகுல் பிரச்னை குறித்து விசாரணை மேற்கொண்டார். இருவரையும் அழைத்து நேரில் விசாரணை செய்தார். 
  ரூ.20 லட்சம் அபராதம்: பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் பணியின் போது உயிரிழந்த துணை ராணுவ படைகள் விதவையர் 10 பேருக்கு தலா ரூ.1 லட்சத்தை வழங்க வேண்டும். மேலும் ரூ.10 லட்சத்தை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்துக்கு வைப்பு நிதியாக இருவரும் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவை அனைத்தையும் 4 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
  பாண்டியா-ராகுல் இருவரும் இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai