சுடச்சுட

  
  nadal

  மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் இத்தாலி வீரர் பேபியா போகினி, செர்பிய வீரர் லஜோவிக் மோதுகின்றனர்.
  உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், இரண்டாம் நிலை வீரர் நடால், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத கியுடா பெல்லாவை எதிர்கொண்டு 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 
  நடால் அதிர்ச்சித் தோல்வி: இதற்கிடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் பேபியோ போகினியுடன் மோதிய நடால் 6-4, 6-2 என்ற நேர்செட்களில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
  மற்றொரு அரையிறுதியில் மெத்வதேவ்-டி.லஜோவிக் மோதினர். இதில் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று லஜோவிக் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai