பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் சென்னை

பெங்களூரு அணியுடன் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ள சென்னை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.

பெங்களூரு அணியுடன் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ள சென்னை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.
நடப்பு சாம்பியனான சென்னை, தனது கடைசி ஆட்டத்தில் ஹைதராபாதுடன் தோல்வியுற்றது. கேப்டன் தோனி முதுகு பிடிப்பால் அதில் ஆடவில்லை. ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். இந்நிலையில் பெங்களூரு அணியுடன் நடைபெறும் மோதலில் அவர் ஆடுவார் எனத் தெரிகிறது. சென்னை அணி பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எழுச்சியுடன் பெங்களூரு: தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணி, கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணியை வீழ்த்தியது.
கோலியின் அபார சதத்தால் பெங்களூரு வென்றது. கொல்கத்தா தீவிரமாக போராடிய நிலையில் வெற்றியின் விளிம்பு அருகே வந்து தோற்றது.
கடந்த 2016-இலும் பெங்களூரு அணி தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோற்றனர். பின்னர் அடுத்த 6 ஆட்டங்களில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
அதே போன்ற நிலை தற்போதும் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது பெங்களூரு. டி வில்லியர்ஸ் சென்னையுடன் நடைபெறும் ஆட்டத்தில் ஆடுவார் எனத் தெரிகிறது. 
ஹைதராபாத்-கொல்கத்தா மோதல்: இரு அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் உள்ள நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. ஹைதராபாத் கடைசியாக தான் ஆடிய ஆட்டத்தில் வலுவான சென்னையை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் போராடி தோல்வியைத் தழுவியது. ரஸ்ஸல்-நிதீஷ் ராணா இருவரும் தங்கள் அணியை வெற்றியின் விளிம்பில் கொண்டு சென்றனர். எனினும் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.
இரு அணிகளுமே சமபலத்துடன் உள்ள நிலையில், அடுத்தடுத்த ஆட்டங்களில் வென்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை நினைத்து பார்க்க 
இயலும்.

இன்றைய ஆட்டங்கள்

கொல்கத்தா-ஹைதராபாத்,
இடம்: கொல்கத்தா,
நேரம்: மாலை 4.00.
பெங்களூரு-சென்னை,
இடம்: பெங்களூரு,
நேரம்: இரவு 8.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com