ஆசிய பளுதூக்கும் போட்டி லால்ரின்னுன்கா சாதனை

ஆசிய பளுதூக்கும் போட்டி லால்ரின்னுன்கா சாதனை

ஆசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் லால்ரின்னுன்கா ஜெரேமி புதிய யூத் உலக மற்றும் ஆசிய சாதனையைப் படைத்தார்.

ஆசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் லால்ரின்னுன்கா ஜெரேமி புதிய யூத் உலக மற்றும் ஆசிய சாதனையைப் படைத்தார்.
சீனாவின் நிங்போ நகரில் ஆசிய பளுதூக்கும் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை ஆடவர் 67 கிலோ பிரிவில் 16 வயதே ஆன ரின்னுன்கா கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 297 கிலோ (134+163 கிலோ) தூக்கி புதிய யூத் உலக மற்றும் ஆசிய சாதனையைப் படைத்தார். அவர் மொத்தம் 6 சர்வதேச சாதனைகள், 9 தேசிய சாதனைகள் என 15 சாதனைகளை முறியடித்தார்.
கடந்த 2018 யூத் ஒலிம்பிக்கில் 62 கிலோ பிரிவில் தங்கம் வென்றிருந்தார் லால்ரின்னுன்கா.
மீராபாய் சானு ஏமாற்றம்
முன்னாள் உலக சாம்பியன் மீராபாய் சானு 49 கிலோ பிரிவில் ஸ்னாட்ச்சில் 86 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 113 கிலோவும் தூக்கி நான்காவது இடத்தையே பெற்றார். மேலும் அவர் வெண்கலப் பதக்கத்தையும் தவறவிட்டார். முதுகுவலியால் ஜகார்த்தா ஆசிய போட்டி, உலக சாம்பியன் போட்டிகளில் பங்கேற்கவில்லை மீராபாய் சானு.
ஜில்லி டாலாபெஹேரா 45 கிலோ பிரிவில் 162 கிலோ தூக்கி வெள்ளி வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com