தமிழ்நாடு பாட்மிண்டன் சூப்பர் லீக்: ஜூன் 3-இல் சென்னையில்  தொடக்கம்

தமிழ்நாடு பாட்மிண்டன் சூப்பர் லீக்: ஜூன் 3-இல் சென்னையில்  தொடக்கம்

தமிழ்நாடு பாட்மிண்டன் சூப்பர் லீக் (டிஎன்பிஎஸ்எல்) போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார் மாநில பாட்மிண்டன் சங்கத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

தமிழ்நாடு பாட்மிண்டன் சூப்பர் லீக் (டிஎன்பிஎஸ்எல்) போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார் மாநில பாட்மிண்டன் சங்கத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

நாட்டிலேயே முதன்முறை

தமிழகத்தில் ஏற்கெனவே மாநில டேபிள் டென்னிஸ் லீக், கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கம் சார்பில் நாட்டிலேயே முதன்முறையாக மாநில அளவில் சூப்பர் லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதற்கான அறிமுக விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க பொதுச் செயலாளர் அருணாசலம் வரவேற்றார். டிஎன்பிஎஸ்எல் தலைவர் சிவா லீக் போட்டி கட்டமைப்பு குறித்து விவரித்தார். 

4 வீரர்கள் ரூ.2 லட்சத்துக்கு ஏலம்

வீரர்கள் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் தலா 11 பேரை தேர்வு செய்தன. 88 வீரர்கள் 5 பிரிவுகளாக (ஆடவர் ஒற்றையர், கலப்பு இரட்டையர், ஆடவர் இரட்டையர், ஜூனியர் கலப்பு இரட்டையர், ஜூனியர் ஆடவர் ஒற்றையர்) என போட்டிகள் நடைபெறும்.

சங்கர் முத்துசாமி (திருப்பூர் வாரியர்ஸ்), கே.சதீஷ்குமார் (கரூர் ஸ்மாஷர்ஸ்), சிதானந்த் குப்தா (சென்னை பிளையிங்), ரித்விக் சஞ்சீவி (திருவள்ளூர் டைட்டன்ஸ்) ஆகிய 4 வீரர்கள் ரூ.2 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

ரூ.1 கோடி அளவுக்கு லீக்போட்டிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வீரர், வீராங்கனைகள் தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்கள் வெல்ல இது உதவும்.

8 அணிகள் பங்கேற்பு

டிஎன்பிஏ தலைவர் டாக்டர் அன்புமணி லீக் போட்டியை தொடங்கி வைத்து கூறியதாவது: 
ஜூன் 3 முதல் 9-ஆம் தேதி வரை சென்னை முகப்பேரில் உள்ள ஃபையர்பால் பாட்மிண்டன் அகாதெமியில் லீக் போட்டி நடைபெறும். 
சென்னை பிளையிங் கிரேவிட்டி, திருவள்ளூர் டைட்டன்ஸ், திருச்சி பிளாஸ்டர்ஸ், மெரீனா சூப்பர் கிங்ஸ், திருப்பூர் வாரியர்ஸ், கரூர் ஸ்மாஷர்ஸ், கோவை நாக்கர்ஸ், காஞ்சி ஸ்பார்க் ஏஸஸ் என 8 அணிகள் இடம் பெறுகின்றன. இவை 4 அணிகள் கொண்ட 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 1 முறை மோதும். முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறும். அதில் வெல்லும் அணி இறுதிக்கு தகுதி பெறும்.

பாட்மிண்டன் அகாதெமி

மாநில சங்கம் சார்பில் விரைவில் பாட்மிண்டன் அகாதெமி தொடங்கப்படும். அதில் இலவசமாக பயிற்சி தரப்படும் என்றார் அன்புமணி.லீக் விளம்பர தூதர் நடிகர் பரத், மகளிர் மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை அலிஷா, டிரம்ஸ் கலைஞர் சிவமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com