நினைவுகள்: 1992 உலகக் கோப்பை: சாம்பியன் பாகிஸ்தான்

கடந்த 1992 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பாகிஸ்தான்.
நினைவுகள்: 1992 உலகக் கோப்பை: சாம்பியன் பாகிஸ்தான்


கடந்த 1992 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பாகிஸ்தான்.
5-ஆவது உலகக்கோப்பை பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் கோப்பை என அழைக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து ஆகியவை இணைந்து நடத்தின. 1992 பிப்ரவரி 22 முதல் மார்ச் 25 வரை நடைபெற்ற இப்போட்டியில் 9 நாடுகள் பங்கேற்றன. மொத்தம் 39 ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல்முறையாக வண்ண சீருடை
ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் போட்டி நடத்தப்பட்டது.  முதன்முறையாக வீரர்களுக்கு வண்ண சீருடைகள் மற்றும் வெள்ளை நிற பந்துகள் பயன்படுத்தப்பட்ட போட்டி இதுவாகும். தென் துருவப் பகுதியில் முதன்முறையாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி இதுவாகும்.
தென்னாப்பிரிக்கா சேர்ப்பு:
இன வேறுபாடு கடைபிடித்ததற்காக சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தென்னாப்பிரிக்கா முதன்முறையாக இதில் சேர்க்கப்பட்டது. 
ஆஸ்திரேலியாவில் 11, நியூஸிலாந்தில் 7 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன. 
இந்திய அணி தான் ஆடிய 8 ஆட்டங்களில் 2 வெற்றி, 5 தோல்வியுடன், 5 புள்ளிகளை மட்டுமே பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது. அதே நேரத்தில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்டவை அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
அரையிறுதிச் சுற்று: முதல் அரையிறுதியில் நியூஸிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான், (நியூஸிலாந்து 262/7, பாகிஸ்தான் 264/6).
இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. (இங்கிலாந்து 252/6, தென்னாப்பிரிக்கா 232/6).
இறுதி ஆட்டம்: பாகிஸ்தான் சாம்பியன்: மெல்போர்னில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்-இங்கிலாந்து மோதின. இதில் பாகிஸ்தான் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. பாகிஸ்தான் 249/6, இம்ரான் கான் 72, இங்கிலாந்து, 227, நீல் பேர்பிரதர் 62.
அதிக ரன்கள் எடுத்தவர்: மார்ட்டின் குரோவ் (நியூஸி)-456,
அதிக விக்கெட் வீழ்த்தியவர்: வாசிம் அக்ரம் (பாக்.)-18.
வித்தியாசமான நிகழ்வுகள்: வழக்கமாக ஒரு ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் தான் முதல் ஓவரை வீசுவார். ஆனால் அதை உடைத்தெறியும் விதமாக நியூஸி கேப்டன் மார்ட்டின் குரோவ், சுழற்பந்து வீச்சாளர் தீபக்பட்டேலை முதல் ஓவர் வீச அழைத்தார். மார்க் கிரேக்ட்பாட்ச் அதிரடி ஆட்டத்தால் நியூஸிலாந்து எளிதாக அரையிறுதிக்கு முன்னேறியது.
தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com