ஆசிய குத்துச்சண்டை போட்டி: அமித்பங்கால், கவிந்தர் சிங் அபாரம்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர்கள் அபார வெற்றி பெற்றனர்.
உலக சாம்பியன் கைரட் எரலியேவுக்கு குத்து விடும் இந்திய வீரர் கவிந்தர் சிங்.
உலக சாம்பியன் கைரட் எரலியேவுக்கு குத்து விடும் இந்திய வீரர் கவிந்தர் சிங்.


ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர்கள் அபார வெற்றி பெற்றனர்.
பாங்காக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஆடவர் 56 கிலோ பிரிவில் நடப்பு உலக சாம்பியன் கஜகஸ்தானின் கைரட் எரலியேவை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஷ்ட், ஒலிம்பிக் சாம்பியன் தோல்வி:
அதே போல் ஆடவர் 52 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கால் 4-1  என்ற புள்ளிக் கணக்கில் ரியோ ஒலிம்பிக் சாம்பியன் ஹஸன்பாய் டுஸ்மடோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
49 கிலோ பிரிவில் தேசிய சாம்பியன் தீபக் சிங் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஆடவர் 64 கிலோ பிரிவில் ரோஹித் தாஸ் 2-3 என மங்கோலியாவின் சின்ஜோரிகிடம் வீழ்ந்தார்.
சோனியா சஹல்: மகளிர் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் சோனியா சஹல் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் கொரியாவின் ஜோ சன் ஹவாயை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மேலும் லவ்லினா போரோகைன் 69 கிலோ, சீமா புனியா 81 கிலோ, ஆகியோர் தத்தமது ஆட்டங்களில் தோல்வியுற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com