நினைவுகள்...: 1996 உலகக் கோப்பை-சாம்பியன் இலங்கை

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 3 நாடுகள் இணைந்து 1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்தின. இப்போட்டி வில்ஸ் உலகக் கோப்பை என அழைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இணைந்து 2-ஆவது
நினைவுகள்...: 1996 உலகக் கோப்பை-சாம்பியன் இலங்கை

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 3 நாடுகள் இணைந்து 1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்தின. இப்போட்டி வில்ஸ் உலகக் கோப்பை என அழைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இணைந்து 2-ஆவது முறையாக நடத்திய போட்டி இதுவாகும்.
பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே வில்ஸ் கோப்பை நடைபெற்றது. 1996 ஜனவரி மாதம், கொழும்பு மத்திய வங்கியில் குண்டுவெடிப்பு நடைபெற்றதால், ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் தங்கள் அணிகள் அனுப்ப மறுத்தன. 
காலிறுதிக்கு இலங்கை நேரடி தகுதி:போதிய பாதுகாப்பு தரப்படும் என இலங்கை உறுதி அளித்தும், தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இரு அணிகளும் வரவில்லை. இதனால் இரு ஆட்டங்களின் முடிவுகளும் இலங்கைக்கு சாதகமாக அறிவிக்கப்பட்டது, இதனால் இலங்கை அணி ஒரு ஆட்டம் கூட ஆடாத நிலையில் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.
9 டெஸ்ட் ஆடும் நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, இங்கிலாந்து, மே.இ.தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் 3 இணை உறுப்பு நாடுகளான கென்யா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் பங்கேற்றன.
ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடைபெற்றது.
இந்திய லீக் ஆட்டங்கள்: குரூப் ஏ பிரிவில் கென்யாவை 7 விக்கெட் வித்தியாசத்திலும், மே.இ.தீவுகளை 5 விக்கெட் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 40 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது இந்தியா. அதே வேளையில் ஆஸ்திரேலியாவிடம் 16 ரன்களிலும், இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியுற்றது. காலிறுதியில் பாகிஸ்தானை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. 
அரையிறுதி ஆட்டங்கள்: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் அரையிறுதியில் இந்தியா-இலங்கை மோதின. 1.1 லட்சம் பார்வையாளர் முன்பு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை 251/8 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 35-ஆவது ஓவரில் 120/8 என தடுமாறிய போது, ரசிகர்கள் பாட்டில்கள், பழங்களை வீசி கலாட்டா செய்தனர். இதை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதையடுத்து ஆட்ட நடுவர் கிளைவ் லாயிட் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
மொஹாலியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் மே.இ.தீவுகளை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.
இலங்கை சாம்பியன்: லாகூரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும்-இலங்கையும் மோதின. முதலில் ஆடிய ஆஸி. 241/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை 245/3 ரன்களை எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை முதன்முதலாக கைப்பற்றியது. அரவிந்த டி சில்பா அபாரமாக ஆடி 107 சதமடித்தார்.
அதிக ரன்கள் குவித்தவர்: சச்சின் டெண்டுல்கர் (523).
அதிக விக்கெட் வீழ்த்தியவர்: அனில் கும்ப்ளே (15).

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com