மே.இ. உலகக் கோப்பை அணியில் பொலார்ட், நரைன் இடம்பெறாதது ஏன்?

சுனில் நரைன் கடைசியாக அக்டோபர் 2016-ல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார்...
மே.இ. உலகக் கோப்பை அணியில் பொலார்ட், நரைன் இடம்பெறாதது ஏன்?

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பக்கட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேஸன் ஹோல்டர் தலைமையிலான அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல்-லில் முத்திரை பதித்த பொலார்ட், சுனில் நரைன் ஆகியோர் தேர்வாகவில்லை. 

சுனில் நரைன் கடைசியாக அக்டோபர் 2016-ல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார். சமீபகாலமாக டி20 ஆட்டங்களில் அவர் சிறப்பாக விளையாடி வருவதால் உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும்  அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலைமையில் உள்ளார். அவரால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் முழுமையாக ஈடுபட முடியாது என்பதால் மே.இ. உலகக் கோப்பை அணியில் அவர் இடம்பெறவில்லை. 

31 வயது பொலார்ட், கடைசியாக அக்டோபர் 2016-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார். இதனால் மற்ற வீரர்களை விட்டு விட்டு அவரைத் திடீரென ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்வது சாத்தியமில்லை எனக் கருதியுள்ளது மே.இ. அணி தேர்வுக்குழு. இங்கிலாந்தின் ஆடுகளம், வீரர்களின் அனுபவம், ஃபார்ம், தொடர்ச்சியான பங்களிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார் தேர்வுக்குழுத் தலைவர் ராபர்ட் ஹேய்ன்ஸ். 

உலகக் கோப்பைக்கான மே.இ. ஆரம்பக்கட்ட அணி: ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), ஃபெபியன் ஆலன், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெயிட், ஷெல்டன் காட்ரெல், ஷன்னோன் கேப்ரியல், கிறிஸ் கெயில், ஹெட்மையர், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், ஆஷ்லி நர்ஸ், நிகோலஸ் பூரண், கெமர் ரோச், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஒஷானே தாமஸ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com