ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் அமித் குமார் 

சீனாவின் ஸியான் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அமித் தாங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் அமித் குமார் 

சீனாவின் ஸியான் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அமித் தாங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராகுல் அவாரே வெண்கலம் வென்றார். 74 கிலோ எடைப் பிரிவில் ப்ரீ ஸ்டைல் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் டானியர் கெய்சனோவிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார் அமித் தாங்கர்.
முன்னதாக அரையிறுதியில் கிர்கிஸ்தான் வீரர் லிஜிஸ் ஜகிப்பெகோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார் அமித். 61 கிலோ எடைப்பிரிவில் மோதிய ராகுல் அவாரே கொரிய வீரர் ஜின்சியோல் 
கிம்மிடம் 9-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
இந்த போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக இதுவரை 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளது. 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தங்கம் வென்றார்.
விக்கி (92 கிலோ எடைப்பிரிவு), தீபக் புனியா (86 கிலோ), சுமித் (125 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றனர். 2 தினங்களில் இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com