கிங்ஸ் லெவன் பஞ்சாப் தோல்வி: பெங்களூருக்கு 4ஆவது வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4ஆவது வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் தோல்வி: பெங்களூருக்கு 4ஆவது வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4ஆவது வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.
பெங்களூரில் எம்.சின்னசுவாமி மைதானத்தில் புதன்கிழமை டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான பார்திவ் படேல் 24 பந்துகளில் 43 ரன்களும், கோலி 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3ஆவது நிலையில் களம் கண்ட டி வில்லியர்ஸ் மைதானத்தில் அதிரடி ஜாலம் நிகழ்த்தினார். 44 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என மொத்தம் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 
மார்கஸ் ஸ்டாய்னிஸ் 34 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி என மொத்தம் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
3.1 ஆவது ஓவரில் ஷமி வீசிய பந்தில் மண்தீபிடம் கேட்ச் ஆகி வெளியேறினார் கோலி. அதைத் தொடர்ந்து, எம்.அஸ்வின் சுழலில் பார்திவ் படேல் கேட்ச் ஆனார். டிவில்லியர்ஸூடன் ஜோடி சேர்ந்த மொயீன் அலி (4 ரன்கள்) வந்த வேகத்தில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அக்ஷ்தீப் நாத் 3 ரன்களில் மண்தீபிடம் கேட்ச் ஆகி பெவிலியனுக்கு திரும்பினார்.
பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி, எம்.அஸ்வின், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹார்டஸ் வில்ஜோயன் ஆகியோர் தலா 4 ஓவர்கள் வீசி தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது பஞ்சாப். அந்த அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் (42 ரன்கள்), நிகோலஸ் பூரன் (46 ரன்கள்) எடுத்தனர். கிறிஸ் கெயில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர், நவ்தீப் சைனி பந்துவீச்சில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் ஆகி 24 ரன்களில் நடையைக் கட்டினார். மயங்க் அகர்வால் 35 ரன்களும், மன்தீப் சிங் 4 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் அஸ்வின் ஒரு சிக்ஸர் விளாசி பெவிலியன் சென்றார். பெங்களூரு சார்பில் உமேஷ் யாதவ் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மொயீன் அலி, ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். முடிவில் 185 ரன்களை மட்டுமே எடுத்தது பஞ்சாப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com