ராஜஸ்தான் அபார வெற்றி

தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது.
ராஜஸ்தான் அபார வெற்றி

தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது.
முதலில் ஆடிய கொல்கத்தா 175/6 ரன்கûளை எடுத்த நிலையில், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 177/7 ரன்களை குவித்து வென்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா தரப்பில் களமிறங்கிய கிறிஸ் லீனை டக் அவுட்டாக்கினார் வருண் ஆரோன். பின்னர் ஷுப்மன் கில்-நிதீஷ் ராணா இணைந்து ஸ்கோரை உயர்த்த முயன்றனர். 
விக்கெட்டுகள் சரிவு: எனினும் ஷுப்மன் கில் 14 ரன்களோடு ஆரோன் பந்தில் போல்டானார். சிறிது நேரத்திலேயே நிதீஷ் ராணாவை 21 ரன்களுக்கு வெளியேற்றினார் ஷிரேயஸ் கோபால். அணியை சரிவில் இருந்து மீட்பார் என கருதப்பட்ட சுனில் நரைன் 11 ரன்களுடன், ஆரோன்-ரஹானேவால் ரன் அவுட் செய்யப்பட்டார். 11.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது கொல்கத்தா.
ரஸ்ஸல் வெளியேற்றம்: சிக்ஸர் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல் ஓரே ஒரு சிக்ஸர் அடித்து 14 ரன்களுக்கும், பிராத்வொயிட் 5 ரன்களுக்கும் அவுட்டாயினர். ரஸ்ஸலுக்கு பதில் சிக்ஸர் அடிக்கும் பணியை தினேஷ் மேற்கொண்டார்.
3 ரன்களில் சதத்தை தவற விட்ட தினேஷ் கார்த்திக்: மறுமுனையில் தனி ஆளாக நின்று தனது அணியை சரிவில் இருந்து மீட்ட கேப்டன் தினேஷ் கார்த்திக் தனது 18-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.  தொடர்ந்து சதம் எடுப்பார் என்ற நிலையில் 9 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 50 பந்துகளில் 97 ரன்களுடன் களத்தில் இருந்தார் தினேஷ். ரிங்கு சிங் 3 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது கொல்கத்தா.
ராஜஸ்தான் தரப்பில் வருண் ஆரோன் 2-20, ஓஷேன் தாமஸ், ஷிரேயஸ் கோபால், உனதிகட் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
4 ஓவர்களில் உனதிகட் மொத்தம் 50 ரன்களை வாரி வழங்கினார்.
176 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் தரப்பில் களமிறங்கிய ரஹானே, சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 5-ஆவது ஓவர் நிறைவில் ஸ்கோர் 50-ஐ தாண்டியது. எனினும் ரஹானே 34 ரன்களுக்கும், சாம்சன் 22 ரன்களுக்கும் அவுட்டாகினர். கேப்டன் ஸ்மித்  2 ரன்களோடு வெளியேறினார். அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களையே எடுத்திருந்தது ராஜஸ்தான்.
பின்னர் பென் ஸ்டோக்ஸ், ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் தலா 11 ரன்கள் எடுத்த நிலையில் சாவ்லா பந்தில் அவுட்டானார்கள். எனினும் ரியான பராக்-ஷிரேயஸ் கோபால் இணை சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் 11 ரன்களுடன் வெளியேறினார் ஷிரேயஸ் கோபால். அப்போது 6 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களை எடுத்திருந்தது ராஜஸ்தான்.
ரியான் பராக் அபாரம் 47: 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 47 ரன்களை விளாசி ரஸ்ஸல் பந்தில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார் பராக்.கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. 
ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 1 சிக்ஸர், 1 பவுண்டரியை விளாசி தனது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
ஆர்ச்சர் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து வென்றது ராஜஸ்தான்.
கொல்கத்தா தரப்பில் சாவ்லா 3-20, சுனில் நரைன் 2-25 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

புள்ளிகள் பட்டியல்

அணிகள்                
சென்னை     11    8    3    16
தில்லி     11    7    4    14
மும்பை     10    6    4    12
ஹைதராபாத்    10    5    5    10
பஞ்சாப்    11    5    6    10
கொல்கத்தா    11    4    7    8
ராஜஸ்தான்    11    4    7    8
பெங்களூரு    11    4    7    8

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com