போதை மருந்து பயன்படுத்திய விவகாரம்: உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து வீரருக்கு இடைக்காலத்தடை!
By எழில் | Published On : 27th April 2019 12:12 PM | Last Updated : 27th April 2019 12:12 PM | அ+அ அ- |

போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ், 21 நாள்கள் கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட முறையில் போதை மருந்து பயன்படுத்திய ஹேல்ஸ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய வருடாந்திரச் சம்பளத்திலிருந்து 5% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் இரண்டாவது முறையாகத் தோல்வியடைந்ததால் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இன்னொருமுறை இதுபோல நடந்தால், அவர் ஒரு வருடத் தடையை எதிர்கொள்ள நேரிடும்.
மே 3 அன்று அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. அதற்கு முன்பு ஹேல்ஸின் தண்டனைக் காலம் முடிந்துவிடும் என அறியப்படுகிறது. இதையடுத்து உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக ஹேல்ஸ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 வயது ஹேல்ஸ் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 11 டெஸ்டுகள், 70 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.