விராட் கோலியின் விருப்பப்படி மீண்டும் பயிற்சியாளராகத் தேர்வாகவுள்ள ரவி சாஸ்திரி! 

நிலைமையை வைத்துப் பார்த்தால் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
விராட் கோலியின் விருப்பப்படி மீண்டும் பயிற்சியாளராகத் தேர்வாகவுள்ள ரவி சாஸ்திரி! 

சூழல்கள் எல்லாம் சாதகமாக உள்ளன. நிலைமையை வைத்துப் பார்த்தால் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

மே.இ.தீவுகள் தொடருக்கு பின்னரும் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியே நீடித்தால் மகிழ்ச்சி தான். புதிய பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) என்னை தொடர்பு கொள்ளவில்லை. அனைவரும் ரவிசாஸ்திரியுடன் சீரான உறவை பேணி வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக சிஏசி தான் முடிவெடுக்க வேண்டும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக இந்தியாவிலிருந்து புறப்படும் முன்பு இவ்வார்த்தைகளைக் கூறினார் கோலி. 

ஏற்கெனவே கோலியுடனான கருத்துவேறுபாடு காரணமாக பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே விலகிய நிலையில் அப்படியொரு சூழல் மீண்டும் உருவாகக்கூடாது என்று பிசிசிஐயும் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் எண்ணுகிறது. எனவே, கோலியின் விருப்பப்படி ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக மீண்டும் தேர்வாகக்கூடிய சூழல் தற்போது உள்ளது. 

ரவி சாஸ்திரி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களின் பணிக்காலம் மே.இ.தீவுகள் தொடர் வரை 45 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தோல்வியை அடுத்து புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ சிஓஏ அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக ஜாம்பவான் கபில்தேவ், முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட், மகளிரணி கேப்டன் சாந்தா ரங்கசாமி தலைமையிலான ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. ரவிசாஸ்திரி மற்றும் தற்போதுள்ள பயிற்சியாளர்கள் நேர்காணலில் நேரடியாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கெடு தற்போது முடிந்துவிட்டது. இதையடுத்து ஆறு முக்கியப் பயிற்சியாளர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்கள். ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத், கேரி கிரிஸ்டன், மைக்கேல் ஹஸ்ஸன், டாம் மூடி, மஹேலா ஜெயவர்தனே. இவர்களில் ஜெயவர்தனே விண்ணப்பிக்கவில்லை என்றொரு தகவலும் கிடைக்கிறது. 

இந்நிலையில்  2020 டி20 உலகக் கோப்பை வரைக்குமான இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இவரோடு பந்துவீச்சுப் பயிற்சியாளராக பரத் அருணும் மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளார். ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸ் அல்லது தற்போது பயிற்சியாளராக உள்ள ஆர். ஸ்ரீதர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ரவி சாஸ்திரி பயிற்சியாளராக உள்ள காலக்கட்டத்தில் இந்திய அணி முக்கியமான வெற்றிகளைப் பெற்றதோடு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசைகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com