Enable Javscript for better performance
போலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகட்- Dinamani

சுடச்சுட

    

    போலந்து ஓபன் மல்யுத்தப் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகட்.
     வார்ஸாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் 53 கிலோ பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகட் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் உள்ளூர் வீராங்கனை ரோக்ஸனாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
     இரண்டு மாதங்களில் வினேஷ் வெல்லும் தொடர் 3-ஆவது தங்கமாகும். கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற யாசர்டோகு போட்டி, ஸ்பெயின் கிராண்ட்ப் ரீ போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai