Enable Javscript for better performance
மாநில நீச்சல் போட்டி: ஆர்கா அணி ஒட்டுமொத்த சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    
    STATE_SWIM_CHAMP

    சென்னையில் நடைபெற்ற மாநில சீனியர் நீச்சல் போட்டியில் அணிகள் பிரிவில் ஆர்கா அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. 50 மீ. பிரஸ்ட்ரோக் பிரிவில் சென்னை வீராங்கனை ஜெயவீணா புதிய தேசிய சாதனை படைத்தார்.
     வேளச்சேரியில் உள்ள எஸ்டிஏடி நீச்சல் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை கடைசி நாள் போட்டிகள் நடைபெற்றன. மகளிர் 50 மீ. பிரஸ்ட்ரோக் பிரிவில் ஏவி.ஜெயவீணா 33.88 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து, புதிய தேசிய சாதனை நிகழ்த்தினார். ஏற்கெனவே கடந்த 20120இல் தில்லி வீராங்கனை பிரியங்கா 34.29 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.
     ஆடவர் பிரிவில் டால்பின் அணி பவன் குப்தா 50 மீ, 100 மீ ப்ரீஸ்டைல் பிரிவுகளில் புதிய போட்டி சாதனையை படைத்தார்.
     திருநெல்வேலி எஸ்டிஏடி வீரர் சேதுமாணிக்கவேல் 32 புள்ளிகளும், மகளிர் பிரிவில் சென்னை விகேஆர். மீனாட்சி 35 புள்ளிகளுடன் தனிநபர் பட்டங்களை வென்றனர்.
     ஆர்கா அணி 170 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
     எஸ்டிஏடி துணை பொதுமேலாளர் சாமுவேல் ராஜா பரிசளித்தார். நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் முரளிதரன், இணைச் செயலர் திருமாறன், நீச்சல் குள அலுவலர் பிரேம்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai