டேல் ஸ்டெயின் ஓய்வு அறிவிப்பு

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் (36) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
டேல் ஸ்டெயின் ஓய்வு அறிவிப்பு

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் (36) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

கடந்த 2015 டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், சர்வதேசப் போட்டிகளில் தனது இருப்பை நீட்டிக்க விரும்பி இம்முடிவை எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளார். 

இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில்,

நான் மிகவும் விரும்பி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இம்முடிவு எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கிரிக்கெட்டில் டெஸ்ட் தான் மிகச் சிறந்தது. இதில் தான் உடலளவிலும், மனதளவிலும், திறனளவிலும் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கும். 

மேலும் சில காலம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்பியதால் இம்முடிவை எடுத்துள்ளேன். இதன்மூலம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த முடியும். எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்றார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஸ்டெயின், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 22.95 சராசரியுடன் மொத்தம் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளராக முதலிடத்தில் உள்ளார். 

ஒரு டெஸ்ட் போட்டியில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளைச் சாய்த்ததும், ஒரு இன்னிங்ஸில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் சிறந்த பந்துவீச்சாகும். 26 முறை 5 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com