ரோஹித் சர்மா வசம் உள்ள மூன்று சர்வதேச டி20 சாதனைகள்!

இந்திய கிரிக்கெட் பிரபலம் ரோஹித் சர்மா வசம் தற்போது மூன்று சர்வதேச டி20 சாதனைகள் உள்ளன...
ரோஹித் சர்மா வசம் உள்ள மூன்று சர்வதேச டி20 சாதனைகள்!

இந்திய கிரிக்கெட் பிரபலம் ரோஹித் சர்மா வசம் தற்போது மூன்று சர்வதேச டி20 சாதனைகள் உள்ளன.

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் டிஎல்எஸ் முறையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் புளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களைக் குவித்தது இந்தியா. ரோஹித் சர்மா 51 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.

5 ஓவர்களில் வெற்றிக்கு 74 ரன்கள் தேவை என்ற நிலையில் இடையில் மோசமான வானிலையால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது 15.3 ஓவரில் 98/4 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது மே.இ.தீவுகள். இதையடுத்து டிஎல்எஸ் முறையில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.    

இந்நிலையில் ரோஹித் சர்மா மூன்று டி20 சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.

டி20: அதிக சிக்ஸர்கள் 

107 - ரோஹித் சர்மா 
105  - கிறிஸ் கெயில் 
103  - மார்டின் கப்தில் 

டி20: அதிக ரன்கள்

2422 - ரோஹித் சர்மா
2310 - விராட் கோலி
2272 - மார்டின் கப்தில்

அதிக டி20 சதங்கள்

ரோஹித் சர்மா - 4
மேக்ஸ்வெல் - 3
மன்ரோ - 3

அதிக அரை சதங்கள்

விராட் கோலி - 20
ரோஹித் சர்மா - 17
மார்டின் கப்தில் - 14

அதிக பவுண்டரிகள்

விராட் கோலி - 225
தில்ஷன் - 223
முகமது ஷஷாத் - 218
ரோஹித் சர்மா - 215

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com