5 நாள்களிலும் பேட்டிங் செய்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த இங்கிலாந்து வீரர்!

முதல் நாளன்று பர்ன்ஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். 2-வது நாளின் முடிவில் 125 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்...
5 நாள்களிலும் பேட்டிங் செய்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த இங்கிலாந்து வீரர்!

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்தை 251 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

இருநாடுகளுக்கு இடையில் பாரம்பரியாக ஆஷஸ் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக முதல் டெஸ்ட் ஆட்டம் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸிஸ் ஆஸ்திரேலியா 284, இங்கிலாந்து 374 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. தடுமாற்றதில் இருந்த ஆஸி. அணியை ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி முதல் இன்னிங்ஸில் சரிவில் இருந்து மீட்டார். இதன் தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடி ஆஸி. அணி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. இதிலும் ஸ்மித் 142 ரன்களையும், மேத்யூ வேட் 110 ரன்களையும் விளாசினர். 487/7 ரன்களுடன் 2-ஆவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஆஸி.
398 ரன்கள் வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியால், ஆஸி. வீரர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. 52.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து.
 ஆஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 6-49 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 4-32 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டை 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. 

இந்த டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பர்ன்ஸ், 5 நாள்களிலும் பேட்டிங் செய்து, இது தொடர்பான பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர் முதல் இன்னிங்ஸில் 133 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 11 ரன்கள் எடுத்துள்ளார். 

முதல் நாளன்று பர்ன்ஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். 2-வது நாளின் முடிவில் 125 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்றாவது நாளில் 133 ரன்களில் ஆட்டமிழந்தார். நான்காவது நாளன்று ஆஸி. அணி இங்கிலாந்துக்கு 398 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. நான்காம் நாளின் முடிவில் 7 ரன்களுடன் களத்தில் இருந்த பர்ன்ஸ், அடுத்த நாள் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 நாள்களும் பேட்டிங் செய்த 10-வது வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். 

5 நாள்களிலும் பேட்டிங் செய்துள்ள வீரர்கள்

எம்.எல். ஜெய்ஷிம்ஹா v ஆஸ்திரேலியா, 1960
ஜெஃப் பாய்காட் v ஆஸ்திரேலியா, 1977
கிம் ஹியூக்ஸ் v இங்கிலாந்து, 1980
ஆலன் லாம்ப் v மே.இ. தீவுகள், 1984
ரவி சாஸ்திரி v இங்கிலாந்து, 1984
கிரிஃப்பித் v நியூஸிலாந்து, 1999
பிளிண்டாஃப் v இந்தியா, 2006
ஏ.என். பீட்டர்சன் v நியூஸிலாந்து, 2012
புஜாரா v இலங்கை, 2017
பர்ன்ஸ் v ஆஸ்திரேலியா, 2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com