ஓய்வு பெற்றார் ஹஷிம் ஆம்லா
By DIN | Published On : 09th August 2019 01:34 AM | Last Updated : 09th August 2019 01:34 AM | அ+அ அ- |

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் ஹஷிம் ஆம்லா.
தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரராக ஆடி வரும் ஆம்லா, அதன் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தவர். 36 வயதான ஆம்லா 124 டெஸ்ட் ஆட்டங்களில் 28 சதங்களுடன் 9282 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 311 ஆகும். மேலும் 181 ஒருநாள் ஆட்டங்களில் 27 சதங்களுடன் 8113 ரன்களை குவித்துள்ளார்.
கடந்த வாரம் தான் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது ஆம்லா அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.