சுடச்சுட

    
    spt7

    மாண்ட்ரியலில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்று முன்னணி நட்சத்திரங்கள் செரீனா வில்லியம்ஸ், நடால் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
    மகளிர் ஒற்றையர் ரவுண்ட் 16 சுற்றில் ரஷியாவின் அலெக்சாண்டரோவாவை 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார் செரீனா.
    இரண்டாம் நிலை வீராங்கனை ஜப்பானின் ஒஸாகா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் போலந்தின் இகாவை வீழ்த்தினார். 
    நடால் தகுதி:  ஆடவர் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் நிலை வீரர் ரபேல் நடால் 6-3, 6-4 என ஆர்ஜென்டீனாவின் கியுடோ பெல்லாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். ஏழாம் நிலை வீரர் இத்தாலியின் ஃபேபியோ போகினி 6-2, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் மன்னாரினோவை வீழ்த்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai