இரட்டை சதம் அடித்து ஷுப்மன் கில் சாதனை

முதல் தர கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இளம் இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
இரட்டை சதம் அடித்து ஷுப்மன் கில் சாதனை

முதல் தர கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இளம் இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
இந்திய மற்றும் மே.இ.தீவுகள் ஏ அணிகளுக்கு இடையிலான 3-ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம் கரிபீயன் தீவுகளில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை 19 வயதான ஷுப்மன் கில் 250 பந்துகளில் 204 ரன்களை விளாசி கெளதம் கம்பீரின் சாதனையை முறியடித்தார்.
3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா ஹனுமாவிஹாரியுடன் இணைந்து அற்புதமாக ஆடினார். கில் இரட்டை சதத்தில் 2 சிக்ஸர், 19 பவுண்டரிகள் அடங்கும். விஹாரி 118 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஷுப்மன் கில் இரட்டை சதம் அடித்தவுடன் 4 விக்கெட் இழப்புக்கு 365 ரன்களுடன் டிக்ளேர் செய்தது இந்திய ஏ அணி.
வெற்றிக்கு 373 ரன்கள் தேவை என்ற பெரிய ஸ்கோருடன் விக்கெட் இழப்பின்றி 37 ரன்களை எடுத்துள்ளது மே.இ.தீவுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com