மழையால் முதல் ஒருநாள் ஆட்டம் ரத்து: கேப்டன்கள் கோலி, ஹோல்டர் அதிருப்தி

மே.இ.தீவுகள்-இந்தியா இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதற்கு கேப்டன்கள் விராட் கோலி, ஜேஸன் ஹோல்டர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மழையால் முதல் ஒருநாள் ஆட்டம் ரத்து: கேப்டன்கள் கோலி, ஹோல்டர் அதிருப்தி

மே.இ.தீவுகள்-இந்தியா இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதற்கு கேப்டன்கள் விராட் கோலி, ஜேஸன் ஹோல்டர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கயானாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. மே.இ.தீவுகள் தரப்பில் கெயில், எவின் லெவிஸ் களமிறங்கினர். 6-ஆவது ஓவர் வீசப்பட்ட போது மழை குறுக்கிட்டதால், போட்டி நிறுத்தப்பட்டு 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பின்னர் மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. கெயில் அவுட்டான நிலையில் 13-ஆவது ஓவரின் போது 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்களை மே.இ.தீவுகள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், மைதானம் முழுவதும் நீர் தேங்கியதால், ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

ஆட்டம் ரத்து: பின்னர் நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்து ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதனால் முதல் ஒருநாள் ஆட்டம் எந்த முடிவும் இன்றி முடிந்தது.


மோசமான வானிலையால் ஆட்டம் முடிந்தது வேதனையாக உள்ளது. எங்கள் தொடக்க வீரர்கள் நிலையை சரியாக கணித்து ஆடினர். பந்துகளை கையாண்டு ஆடுவதில் சற்று சிரமம் இருந்தது. எனினும் அடுத்தடுத்த ஆட்டங்களில் வானிலை உதவ வேண்டும். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.


கிரிக்கெட்டின் மிகவும் மோசமான பகுதி ஆட்டம் தொடங்கி உடனே முடிந்து விடுவது தான். ஒன்று முழுமையாக மழை பெய்து விட வேண்டும் அல்லது முழு ஆட்டம் நடக்க வேண்டும். இத்தகைய நிலையில் வீரர்கள் காயம் பட வாய்ப்புள்ளது. ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து மீண்டும் சிறப்பான திறனுடன் ஆடி வருகிறது. 400 ரன்கள் என்பது சாதாரணமாகி வருகிறது. டி20 ஆட்டத்தின் செல்வாக்கால், ஒருநாள் ஆட்டங்களும் விரைவான தன்மையுடன் ஆடப்படுகின்றன. 

இதனால் ஸ்கோர்களும் கூடுதலாக இருக்கும். கரீபியன் தீவுகளில் உள்ள சில பிட்ச்கள் நமக்கு சோதனையை தரும். சில வேகப்பந்து வீச்சு, பவுன்சுக்கு உதவும். சூழ்நிலையை அனுசரித்து, சிறப்பான ஆட்டத்தை ஆடும் அணி வெல்ல முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com