தலைமைப் பயிற்சியாளர் நேர்காணலுக்கான இறுதிப் பட்டியல் ரெடி: 6 பேர் தேர்வு 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் நேர்காணலுக்கு இறுதியாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் நேர்காணலுக்கு இறுதியாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பையில், இந்திய அணி அரையிறுதியுடன் தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு மேற்கிந்தியத் தீவுகள் தொடர் வரை 45 நாட்களுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்காக கபில் தேவ் தலைமையில் 3 பேர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் நேர்காணலுக்கு இறுதியாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த 6 பேர்:

  1. நியூஸிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன்
  2. ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரௌண்டரும் இலங்கை பயிற்சியாளருமான டாம் மூடி
  3. மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் ஆல்-ரௌண்டரும் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளருமான ஃபில் சிம்மன்ஸ்
  4. இந்திய அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புட்
  5. இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் 
  6. இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி


இந்த 6 பேரும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிடம் செயல்முறை விளக்கம் அளிக்கவுள்ளார்கள். இதையடுத்து, இதுதொடர்பான இறுதி முடிவு வரும் வார இறுதியில் அல்லது அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்காக இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன், இந்தியாவின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com