சுடச்சுட

    

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: நேர்காணலுக்கு 6 பேர் தேர்வு

    By DIN  |   Published on : 13th August 2019 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bci


    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    தலைமை பயிற்சியாளராக தற்போது ரவிசாஸ்திரி செயல்பட்டு வருகிறார். உலகக் கோப்பையுடன் அவரது பதவிக் காலம் முடிந்த நிலையில், மே.இ.தீவுகள் தொடருக்காக அவருக்கும், உதவி பயிற்சியாளர்களுக்கும் 45 நாள்கள் நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.
    இந்நிலையில் புதிய பயிற்சியாளர் நியமனத்துக்கானஅறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. ரவிசாஸ்திரி நேரடியாக நேர்காணலில் பங்கேற்க சலுகை தரப்பட்டுள்ளது. மேலும் இந்திய தரப்பில் லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங், நியூஸி. முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன், இலங்கை முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி, ஆப்கன் முன்னாள் பயிற்சியாளர் ஃபில் ஜோன்ஸ் ஆகியோரது பெயர்களும் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    கபில்தேவ் தலைமையிலான சிஏசி முன்பு 6 பேரும் தங்கள் செயல்பாடு, திட்டங்கள் குறித்து விவரிப்பர். பின்னர் புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai