சுடச்சுட

    

    19 வயதுக்குட்பட்டோர் முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

    By DIN  |   Published on : 13th August 2019 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    india-under-19-win

    கோப்பையுடன் இந்திய அணியினர்.


    இங்கிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையில் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 261 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் மஹ்முதுல் ஹஸன் ராய் 1 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 109 ரன்களையும், பர்வேஸ் ஹூசைன் இமோன் 3 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 60 ரன்களையும் விளாசினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுடன் அவுட்டாயினர்.
    இந்திய தரப்பில் கார்த்திக் தியாகி 2-49, சுஷாந்த் மிஸ்ரா 2-33 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    262 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய இந்திய அணி 48.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டை மட்டும் இழந்து 264 ரன்களை எடுத்து வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 
    பிரியம் கார்க் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 73 ரன்களையும், ஜெய்ஸ்வால் 50, திவ்யான்ஸ் சக்úஸனா 55, துருவ் ஜுரெல் 59 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். வங்கதேச தரப்பில் ரகிபுல் ஹுசேன் 2-55 விக்கெட்டை சாய்த்தார்.
    முதன் மூலம் முத்தரப்பு தொடர் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai