துளிகள்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை காலேயில் இலங்கை-நியூஸி. இடையே முதல் டெஸ்ட் ஆட்டம் தொடங்குகிறது. 2 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரை 2-0 என நியூஸி வென்றால், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி நியூஸி முதலிடத்தை பெறும்.


இந்தியா-பாக். இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை, இஸ்லாமாபாதில் இருந்து நடுநிலையான இடத்துக்கு மாற்ற வேண்டும் என அணி வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மட்டுமே ஏஐடிஏ பொதுச் செயலாளர் ஹிரோன்மாய் சாட்டர்ஜி கூறியுள்ளது, வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தூதரக அதிகாரிகளை அவமதித்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியத்துக்கு கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.


இந்தியாவைச் சேர்ந்த 6 இளம் செஸ் வீரர்களுக்கு முன்னாள் உலக சாம்பியனும், கிராண்ட் மாஸ்டருமான விளாடிமிர் கிராம்னிக் ஸ்விட்சர்லாந்தில் பயிற்சி அளிக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com