சுடச்சுட

  

  சாதனையை நெருங்கிவிட்ட குல்தீப் யாதவ்: சோதனைகளைக் கடந்து சாதிப்பாரா?

  By எழில்  |   Published on : 14th August 2019 10:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kuldeep_no1

   

  குறைந்த ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர், முகமது ஷமி. 56 ஆட்டங்களில் அவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். பும்ரா ஒரு ஆட்டம் அதிகமாக விளையாடி இந்த இலக்கை அடைந்துள்ளார். உலகளவில் 44 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார் ரஷித் கான். 

  முகமது ஷமியின் சாதனையை நெருங்கிவிட்டார் 24 வயது சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். 53 ஒருநாள் ஆட்டங்களில் 96 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இன்னும் இரு ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகள் எடுத்தால் ஷமியின் சாதனையைத் தாண்டிவிடுவார். ஆனால் சமீபகாலமாக அவருடைய பந்துவீச்சின் தாக்கம் மிகவும் குறைந்துவிட்டது.

  முதல் 33 ஆட்டங்களில் 67 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய குல்தீப், கடைசி 20 ஒருநாள் ஆட்டங்களில் 29 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். 

  உலகக் கோப்பைப் போட்டியில் 7 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களில் மூன்று விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள 3-வது ஆட்டத்தில் குல்தீப் யாதவின் பந்துவீச்சை ரசிகர்கள் மிகவும் கவனிப்பார்கள். இது குல்தீப்புக்குப் புதிய சவாலாக இருக்கும். 

  சோதனைகளைக் கடந்து சாதிப்பாரா குல்தீப் யாதவ்?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai