அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி சாம்பியன்

கோவையில் நடைபெற்று வந்த 55 ஆவது பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆடவர் கூடைப்பந்துப் போட்டியில் இந்தியன் வங்கி அணி பட்டத்தை வென்றது.
பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆடவர் கூடைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு கோப்பையை வழங்கும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண்.
பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆடவர் கூடைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு கோப்பையை வழங்கும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண்.


கோவையில் நடைபெற்று வந்த 55 ஆவது பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆடவர் கூடைப்பந்துப் போட்டியில் இந்தியன் வங்கி அணி பட்டத்தை வென்றது.
கோவை, பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் போட்டி நடைபெற்றது. இதில் இறுதி ஆட்டத்துக்கு இந்தியன் வங்கி அணியும், இந்திய ராணுவ அணியும் தகுதி பெற்றன. முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற மூன்று மற்றும் நான்காவது இடத்துக்கான ஆட்டத்தில் கேரள மின்வாரிய அணியை எதிர்த்து இந்திய விமானப் படை அணி விளையாடியது.
இதில் கேரள மின்சார வாரிய அணி 76-73 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய விமானப் படை அணியை வென்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய ராணுவ அணியை எதிர்த்து இந்தியன் வங்கி அணி விளையாடியது.
இதில் இந்தியன் வங்கி  அணி 79-61 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய ராணுவ அணியை வீழ்த்தியது. பட்டம் வென்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.ஒரு லட்சமும், பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த இந்திய ராணுவ அணிக்கு ரூ.50 ஆயிரமும், பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், மூன்றாம் இடம் பிடித்த கேரள மின்சார வாரிய அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பெற்ற இந்திய விமானப் படை அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தியன் வங்கி அணியின் வீரர் ஹரிராம் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவுக்கு பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவரும், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநருமான ஜி.செல்வராஜ் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை ஆணையர் சுமித் சரண் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com