நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுமா இலங்கை அணி?

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுமா இலங்கை அணி?

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

கேலேவில் நேற்று தொடங்கிய டெஸ்டில், முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி, 83.2 ஓவர்களில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெய்லர் அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்தார். இலங்கை அணித் தரப்பில் தனஞ்ஜெயா 5 விக்கெட்டுகளையும் லக்மல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 161 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குசால் மெண்டிஸ் 53, மேத்யூஸ் 50 ரன்கள் எடுத்தார்கள். 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிக்வெல்லாவும் லக்மலும் 2-வது நாளின் இறுதிவரை மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். 

2-வது நாளின் இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. டிக்வெல்லா 33, லக்மல் 24 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். நியூஸிலாந்துத் தரப்பில் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கை அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், 22 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுமா என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com