சுடச்சுட

    

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் - பிரண்டன் மெக்கல்லம்

    By எழில்  |   Published on : 15th August 2019 04:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    McCullum555

     

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜாக் காலிஸும் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சைமன் கடிச்சும் சமீபத்தில் விலகினார்கள். இந்நிலையில் கேகேஆர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக 37 வயது பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். மெக்கல்லம், கேகேஆர் அணிக்காக 5 வருடங்கள் விளையாடியுள்ளார். 2009-ல் கேப்டனாகவும் இருந்துள்ளார். சமீபத்தில், அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மெக்கல்லம்.

    இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றியடைந்தது கேகேஆர். பிறகு தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. பிறகு அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் வென்றது. எனினும் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றுப்போனதால் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடம் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போய்விட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai