இன்று டிஎன்பிஎல் இறுதி ஆட்டம்: திண்டுக்கல்-சேப்பாக் மோதல்

சென்னையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள 4-ஆவது டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
டிஎன்பிஎல் கோப்பையுடன் திண்டுக்கல் கேப்டன் ஜெகதீசன், சேப்பாக் கேப்டன் கெளஷிக் காந்தி.
டிஎன்பிஎல் கோப்பையுடன் திண்டுக்கல் கேப்டன் ஜெகதீசன், சேப்பாக் கேப்டன் கெளஷிக் காந்தி.


சென்னையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள 4-ஆவது டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
சேப்பாக்கம் மைதானத்தில் இரவு நடைபெறும் ஆட்டத்தில் 2 அணிகளும் மோதுகின்றன. இதில் 2017-இல் சேப்பாக் அணி பட்டம் வென்றிருந்தது. அதே நேரத்தில் கடந்த 2018இல் இறுதி ஆட்டத்தில் 2-ஆவது இடம் பெற்றது திண்டுக்கல்.
திண்டுக்கல் அணியின் கேப்டன் ஜெகதீசன் இந்த ஆண்டு 448 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். அந்த அணியின் தொடக்க வரிசை பேட்டிங் சிறப்பாக உள்ளது.
மேலும் சேப்பாக் அணியின் பிரதான பலமே அவர்களது வேகப்பந்து வீச்சாகும். பெரியசாமி, ஹரிஷ்குமார், சுழற்பந்து வீச்சாளர் ராமதாஸ், ஆகியோர் பந்துவீச்சில் மிரட்டி வருகின்றனர்.
பேட்டிங்கிலும் சேப்பாக் அணியில் ஹரி கோபிநாத், கங்கா ஸ்ரீதர் ராஜு ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில் சேப்பாக் அணியே 3 முறை வென்றுள்ளது.  திண்டுக்கல் 2 முறை வென்றுள்ளது.
முதல் குவாலிபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் தோல்வியடைந்த போதிலும், 2-ஆவது குவாலிபையர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரையை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
எங்கள் அணி கேப்டன் அஸ்வின் தேசிய அணியில் விளையாட சென்று விட்டது, சிறிது பாதிப்பாக உள்ளது. 
எனினும் அவர் இல்லாத நிலையிலும் நாங்கள் சிறப்பாக ஆடி வெற்றி பெறுவோம் என திண்டுக்கல் கேப்டன் நாராயணன் ஜெகதீசன் கூறியுள்ளார்.
சேப்பாக் கேப்டன் கெளஷிக் காந்தி கூறுகையில்: 
மைதானத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அதற்கு வெற்றி உரிதாகும். எங்கள் அணியில் இந்திய வீரர் விஜய் சங்கர் உள்ளது அதிக ஊக்கத்தை தருகிறது என்றார்.

இன்றைய ஆட்டம்
சேப்பாக்-திண்டுக்கல்,
இடம்: சேப்பாக்கம் மைதானம்,
நேரம்: இரவு 7.15

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com