சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச், பெடரர், முன்னேற்றம்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ரோஜர் பெடரர் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர், அதே  நேரத்தில் செரீனா போட்டியில் இருந்து விலகினார்.

தொடக்க சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் சாம் குயுரியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 
7 முறை சின்சினாட்டி சாம்பியன் பெடரர் 6-4, 6-3 என ஜுவான் லான்டரோவை வென்றார். 
மற்றொரு ஆட்டத்தில் ஸ்டேன் வாவ்ரிங்கா 5-7, 6-4, 7-6 என முன்னாள் சாம்பியன் டிமிட்ரோவை வீழ்த்தினார். மோன்பில்ஸ் 7-6, 6-3 என பிரான்ஸஸ் டியாபோவை வென்றார். 
மகளிர் பிரிவில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா முதுகுவலி பிரச்னை காரணமாக போட்டியில் இருந்து விலகினார் கடந்த வாரம் டொரண்டோ போட்டியிலும் மூட்டுவலி காரணமாக அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சாம்பியன் கிகி பெர்டென்ஸ் 2-ஆவது சுற்றில் 3-6, 6-3, 6-7 என வீனஸ் வில்லியம்ஸிடம் தோல்வியுற்றார். மடிஸன் கீய்ஸ் 6-7, 7-6, 6-4 என முகுருஸவை வீழ்த்தினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com