கிரிக்கெட் பந்து தாக்கியதில் ஒரு மாதம் கழித்து உயிரிழந்த நடுவர்

இங்கிலாந்தின் உள்ளூர் போட்டி ஒன்றில் பந்து தாக்கியதில் ஒரு மாதம் கழித்து அப்போட்டியின் நடுவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
கிரிக்கெட் பந்து தாக்கியதில் ஒரு மாதம் கழித்து உயிரிழந்த நடுவர்

இங்கிலாந்தின் உள்ளூர் போட்டி ஒன்றில் பந்து தாக்கியதில் ஒரு மாதம் கழித்து அப்போட்டியின் நடுவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில்,

பெம்ப்ரோக்ஷயரின் ஹன்டல்டன் பகுதியைச் சேர்ந்த ஜான் வில்லியம்ஸ் (80), பெம்ப்ரோக், நார்பெத் இடையில் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆவது டிவிஷன் கௌன்டி ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டார்.

அப்போது அவர் மீது பந்து தாக்கியதில் மயக்கமடைந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், ஆகஸ்ட் 16-ஆம் தேதி அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளது.

மறைந்த ஜான் வில்லியம்ஸ், சிறந்த மனிதர் மற்றும் மிகச்சிறந்த கிரிக்கெட் அறிவு கொண்டவர். கிரிக்கெட்டுக்காக தனது வாழ்வின் அதிக நேரங்களை செலவிட்டவர் என அப்பகுதி கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com