துளிகள்...

    அதிக டெஸ்ட் ஆட்டங்களில் நடுவராக பணிபுரிந்த ஸ்டீவ் பக்னரின் (128 டெஸ்ட்கள்) சாதனையை சமன் செய்துள்ளார் பாகிஸ்தான் நடுவரான ஆலிம் தர். லார்ட்ஸில் நடைபெறும் ஆஷஸ் தொடரின் 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்தின் மூலம் தர் இச்சாதனையை நிகழ்த்தி உள்ளார்.


    ஐபிஎல் அணிகளில் ஒன்றான முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது புதிய தலைமைப் பயிற்சியாளராக நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் பிரென்டன் மெக்கல்லமை நியமித்துள்ளது. ஏற்கெனவே கொல்கத்தா அணியில் 2008-10, 2012-13 ஆண்டுகளில் மெக்கல்லம் கேகேஆர் வீரராக திகழ்ந்தவர்.


    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவிசாஸ்திரிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஜாம்பவான் கபில்தேவ் தலைமையிலான சிஏசி வெள்ளிக்கிழமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த 6 நபர்களிடம் நேர்காணலை நடத்துகிறது.


    மே.இ.தீவுகளுக்கு எதிராக 3-ஆவது ஆட்டத்தில் தனது வலது கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் மோசமானது இல்லை. அது முறிவும் இல்லை. எனவே டெஸ்ட் ஆட்டத்துக்கு தயாராவதில் எந்த சிக்கலும் என கோலி தெரிவித்துள்ளார்.


    சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆஸி.வீராங்கனை ஆஷ்லி பர்டி 6-4. 6-1 என்ற நேர் செட்களில் மரியா ஷரபோவாவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் சிமோனா 3-6, 7-5, 6-4 என அலெக்சாண்டிரோவாவையும், முதல்நிலை வீராங்கனை நவோமி ஒஸாகா 7-6, 2-6, 6-2 என சாஸ்நோவிச்சையும் வென்றனர். முன்னணி வீராங்கனைகள் விட்டோலினா, சபலென்கா, மடிஸன் கீய்ஸ் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com