தோனி-ஃபிளெமிங் சிறந்த கேப்டன்; பயிற்சியாளர் இணை

உலகிலேயே தோனி-ஃபிளெமிங் தான் சிறந்த கேப்டன்-பயிற்சியாளர் இணையாக விளங்குகின்றனர் என ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.


உலகிலேயே தோனி-ஃபிளெமிங் தான் சிறந்த கேப்டன்-பயிற்சியாளர் இணையாக விளங்குகின்றனர் என ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
டிஎன்பிஎல் தொடரில் வர்ணனையாளராக பங்கேற்றுள்ள வாட்சன் வியாழக்கிழமை கூறியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் பெற்ற அனுபவம் மிகவும் சிறப்பானது. அணியின் உரிமையாளரான சீனிவாசன் எவ்வாறு ஒரு அணியை நடத்த வேண்டும் என்ற வகையில் சிறப்பாக செயல்படுகிறார். தோனி-ஃபிளெமிங் இணை தான் சிறந்த கேப்டன்-பயிற்சியாளர் இணையாகும்.
சிஎஸ்கே வெற்றிக்கு எந்த ரகசியமும் இல்லை. சிறந்த அணி நிர்வாகம், இயக்கமே காரணம். ஆஷஸ் தொடரில் ஆஸி. வெல்ல அதிக வாய்ப்புள்ளது. ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சிறப்பாக ஆடி வருவது மகிழ்ச்சி தருகிறது. நாட்டுக்காகவும், ஐபிஎல் அணிக்காவும் விளையாடுவது என்பதே வேறுபாடு நிறைந்தது.
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை எத்தகைய அழுத்தமான சூழலிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்றார் வாட்சன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com