முதல் டெஸ்ட்: நியூஸி. 249, இலங்கை 227/7

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்
முதல் டெஸ்ட்: நியூஸி. 249, இலங்கை 227/7


இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்திருந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த டெஸ்டின் முதல் நாளான புதன்கிழமை நியூஸி அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை எடுத்திருந்தது. 86 ரன்களுடன் களமிறங்கிய ராஸ் டெய்லர் மேலும் ரன் ஏதும் எடுக்காமல் லக்மல் பந்தில் அவுட்டானார். சான்டநர் 13, டிம் செளதி 14, டிரென்ட் பெளல்ட் 18, அஜாஸ் பட்டேல் 0 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.
இறுதியில் 83.2 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
இலங்கை தரப்பில் அகிலா தனஞ்செயா 5-80, சுரங்க லக்மல் 4-29 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை இலங்கை அணி தொடர்ந்தது. கேப்டன் திமுத் கருணரத்னே, லஹிரு திரிமனே களமிறங்கினர். 10 ரன்களுடன் திரிமனே அவுட்டானார். உணவு இடைவேளையின்போது 34-1 ரன்களை எடுத்திருந்தது இலங்கை. 
இலங்கை 227/7: இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்திருந்தது.
குஸால் மெண்டிஸ் 53, ஏஞ்சலோ மேத்யூஸ் 50, திமுத் கருணரத்னே 39, நிரோஷன் டிக்வெலா 39, சுரங்க லக்மல் 28 ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 
அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்: நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் அற்புதமாக பந்துவீசி 5-76 விக்கெட்டுகளை சாய்த்தார். பெளல்ட், சோமர்வில்லே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
நியூஸி. 22 ரன்கள் முன்னிலை: இலங்கையை காட்டிலும் 22 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது நியூஸிலாந்து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com