யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை: லிவர்பூல் சாம்பியன்

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு யுஇஎப்ஏ சூப்பர் கோப்பை போட்டியில் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை: லிவர்பூல் சாம்பியன்


ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு யுஇஎப்ஏ சூப்பர் கோப்பை போட்டியில் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் லிவர்பூல்-செல்ஸி உள்ளிட்ட இரு அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோப்பை ஆட்டம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில் இரு அணிகளுமே மாறி மாறி ஆதிக்கம் செலுத்தின. 
வழக்கமான ஆட்ட நேரத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் சாடியோ மேன் 2 கோலடித்தார். அதற்கு பதிலடியாக செல்ஸி அணி தரப்பில் ஒலிவியர் ஜிரெளட், ஜோஹின்ஹோ ஆகியோர் கோலடித்ததால், கூடுதல் நேர முடிவில் 2-2 என சமநிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 5-4 என்ற கோல் கணக்கில் செல்ஸி அணியை வீழ்த்தி சூப்பர் கோப்பையை தட்டிச் சென்றது லிவர்பூல். 
அந்த அணியில் முகமது சலா, ஆப்ரஹாம், ஆகியோர் சிறப்பாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர். இது லிவர்பூல் அணியின் 4-ஆவது சூப்பர் கோப்பை வெற்றியாகும். ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய போட்டிகளில் லிவர்பூல் வெல்லும் 13-ஆவது பட்டமாகும். 
முதல் பெண் நடுவர்: பெரிய ஐரோப்பிய கால்பந்து போட்டியின் பிரதான நடுவராக செயல்பட்ட பெண் என்ற சிறப்பை ஸ்டெப்பானி பிராப்பர்ட் (பிரான்ஸ்) பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com