அர்ஜுனா விருதுக்கு ரவீந்திர ஜடேஜா பெயர் பரிந்துரை

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உட்பட 19 விளையாட்டு வீரர்கள் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனா விருதுக்கு ரவீந்திர ஜடேஜா பெயர் பரிந்துரை


கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உட்பட 19 விளையாட்டு வீரர்கள் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளுக்கு விளையாட்டு வீரர்களை பரிந்துரைப்பதற்கான 12 பேர் அடங்கிய குழு புதுதில்லியில் நேற்றும் இன்றும் கூடியது. இதன் முடிவில், அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உட்பட 19 விளையாட்டு வீரர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது:

பஜ்ரங் பூனியா, தீபா மாலிக்

துரோணாச்சாரியா விருது:  

விமல் குமார் (பாட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொஹிந்தர் சிங் தில்லான் (தடகளம்)

அர்ஜுனா விருது:

  1. தஜின்தர்பால் சிங் தூர் (தடகளம்)
  2. முகமது அனாஸ் யாஹியா (தடகளம்)
  3. எஸ். பாஸ்கரன் 
  4. சோனியா லாதர் (குத்துச் சண்டை)
  5. ரவீந்திர ஜடேஜா (கிரிக்கெட்)
  6. சிங்லென்சனா சிங் கங்குஜன் (ஹாக்கி)
  7. அஜய் தாகுர் (கபடி)
  8. கௌரவ் சிங் கில் (மோட்டார் விளையாட்டு)
  9. பிரமோத் பாகத் (பாட்மிண்டன்)
  10. அன்ஜும் மௌத்கில் (துப்பாக்கிச் சுடுதல்)
  11. ஹர்மீத் ராஜுல் தேசாய் (டேபிள் டென்னிஸ்)
  12. பூஜா தண்டா (மல்யுத்தம்)
  13. ஃபௌவாத் மிஸ்ரா 
  14. குர்பிரீத் சிங் சாந்து (கால்பந்து)
  15. பூனம் யாதவ் (கிரிக்கெட்)
  16. ஸ்வப்னா பர்மான் (தடகளம்)
  17. சுந்தர் சிங் குர்ஜார் (தடகளம்)
  18. பாமித்பதி சாய் பிரனீத் (பாட்மிண்டன்)
  19. சிம்ரன் ஷெர்கில் 

தயான்சந்த் விருது:

மேனுவல் ஃப்ரெட்ரிக்ஸ், அருப் பாஸக், மனோஜ் குமார், நித்தேன் கீர்தனே, லால்ரெம்சங்கா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com