முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து 177 ரன்கள் முன்னிலை

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து 177 ரன்கள் முன்னிலை


நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
பின்னர் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 177 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
காலேயில் முதல் டெஸ்ட் நடைபெற்று வரும் நிலையில் நியூஸி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-ஆம் நாள் முடிவில் 227/7 ரன்களை எடுத்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை நிரோஷ் டிக்வெலா 61, சுரங்க லக்மல் 40, ரன்களை விளாசி கடைசியில் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் 93.2 ஓவர்களில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூஸி தரப்பில் அஜாஸ் பட்டேல் 5-89, சாமர்வில்லெ 3-83, பெளல்ட் 2-45 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நியூஸிலாந்து திணறல்: பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி 2-ஆவது வேளைமுடிவில் 43 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை எடுத்திருந்தது. ஜீத் ராவல் 4, டாம் லத்தம் 45, கேன் வில்லியம்ஸன் 4, ராஸ் டெய்லர் 3, ஹென்றி நிக்கோல்ஸ் 26, ரன்களை எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
வாட்லிங் அரைசதம்: 6ஆவது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடிய பிஜே வாட்லிங் அணியை சரிவில் இருந்து மீட்டு அரைசதத்தையும் பதிவு செய்தார். மிச்செல் சான்ட்நர் 12, டிம் செளதி 23 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர்.
வாட்லிங் 63 ரன்களுடனும், சாமர்வில்லே 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நியூஸி. அணி 195/7 ரன்களை எடுத்திருந்தது. இலங்கை தரப்பில் லஸித் எம்புல்டெனியா 4-71, தனஞ்செய டி சில்வா 2-1 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com