துளிகள்...
By DIN | Published On : 19th August 2019 01:15 AM | Last Updated : 19th August 2019 01:15 AM | அ+அ அ- |

ஐ லீக் சாம்பியன் அணியான சென்னை சிட்டி கிளப், தமிழகத்தில் அடிமட்ட அளவில் கால்பந்து விளையாட்டின் தரத்தை மேம்படுத்த ஜெர்மனியின் யுஎச்எல் ஸ்போர்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
எஸ்டோனியாவின் டலீன் நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் மல்யுத்த போட்டியில் இந்தியா அணி ஒரு தங்கம் உள்பட 3 பதக்கங்களை வென்றுள்ளது. தீபக் புனியா தங்கம், விக்கி, சஜ்ஜன் பன்வால் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார்பந்தய மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்எம்எஸ்சி எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன் போட்டியில் கோவையின் அர்ஜுன் பாலு பட்டம் வென்றார்.
செக். குடியரசில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மிட்டினிக் ரைட்டர் தடகளப் போட்டியில் 300 மீ. ஓட்டப் பந்தயத்தில் மகளிர் பிரிவில் ஹிமா தாஸூம், ஆடவர் பிரிவில் முகமது அனாஸூம் தங்கப் பதக்கம் வென்றனர்.
சர்ச்சைக்குரிய இரட்டை ஆதாயப் பதவி விவகாரம் தொடர்பாக மும்பையில் பிசிசிஐ தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சிஓஏ உறுப்பினர்களுடன் முன்னாள் வீரர்கள் வெங்சர்க்கார், அஜித் அகர்கர், விவிஎஸ்.லஷ்மண், திராவிட், ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தான் வீசிய பவுன்சர் பந்தில் காயமடைந்த ஆஸி. வீரர் ஸ்மித்தின் பாதிப்பு குறித்து வந்து பார்வையிடாத ஜோஃப்ரா ஆர்ச்சரை கடுமையாக சாடியுள்ளார் பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர்.