இரட்டை ஆதாய பதவி விவகாரம் வெள்ளை அறிக்கை தயாரிக்க பிசிசிஐ சிஓஏ முடிவு

இரட்டை ஆதாய பதவி விவகாரம் தொடர்வான வழிமுறைகளை அமுல்படுத்துவதில் கடும் சிரமம் உள்ள நிலையில் அதுதொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்க பிசிசிஐ சிஓஏ முடிவு செய்துள்ளது.
இரட்டை ஆதாய பதவி விவகாரம் வெள்ளை அறிக்கை தயாரிக்க பிசிசிஐ சிஓஏ முடிவு


இரட்டை ஆதாய பதவி விவகாரம் தொடர்வான வழிமுறைகளை அமுல்படுத்துவதில் கடும் சிரமம் உள்ள நிலையில் அதுதொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்க பிசிசிஐ சிஓஏ முடிவு செய்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சிஓஏ உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மும்பை பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது. 
சிஓஏ உறுப்பினர்கள் டயானா எடுல்ஜி, ரவி தோக்டே முன்னாள் வீரர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இர்பான் பதான், பார்த்திவ் பட்டேல், அஜித் அகர்கர், ரோஹன் கவாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் கேப்டன்கள் வெங்சர்க்கார், செளரவ் கங்குலி ஸ்கைப் மூலம் பங்கேற்றனர். 
மேலும் முன்னாள் கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் (சிஏசி) டெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் ஆகியோர் இரட்டை ஆதாய பதவி விவகாரத்தால் பாதிக்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள், பிசிசிஐ நிர்வாகிகளுக்கான சிரமங்கள், தொடர்பாக திறந்த விவாதம் நடந்தது.
இதுதொடர்பாக ரவி தோக்டே கூறுகையில்: சில அம்சங்களை நாங்கள் ஏற்றோம். சிலவற்றை நாங்கள் ஏற்கவில்லை.  குறிப்பாக வீரர்-நேர்முக வர்ணனையாளர், வர்ணனையாளர்-ஐபிஎல் அணி ஊழியர், வர்ணனையாளர்-நிர்வாகி-ஐபிஎல் அணி ஆலோசகர் போன்றவை குறித்து பேசப்பட்டது.
புதிய பிசிசிஐ சட்டவரையறையின்படி ஒருவர் ஒரு பதவி தான் வகிக்க வேண்டும், இல்லையென்றால் அது ஆதாயம் தரும் இரட்டை பதவி வரம்பில் வரும் எனக் கூறப்பட்டுள்ளது. கங்குலியும் தனது கருத்துகளை கூறியுள்ளார்.
வெள்ளை அறிக்கை: இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கப்படும் என்றார்.
டயானா எடுல்ஜி கூறுகையில்: தற்போதைக்கு சட்டவரையறை விதிமுறைகள் கடைபிடிக்கப்படும். திருத்தங்கள் தொடர்பாக நீதிமன்றம் தான் முடிவு செய்யும். அடுத்து தலைவர் வினோத் ராய் தலைமையில் கூடும் கூட்டத்தில் இந்த அம்சங்கள் குறித்து முடிவெடுக்கப்படும். கிரிக்கெட் மேம்பாட்டுக்கு சிஓஏ தன்னால் ஆன முயற்சிகளை செய்யும். நெறிமுறை அலுவலர் டி.கே. ஜெயின் விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளார். வெள்ளை அறிக்கை தயாரிப்பு நீண்டகாலம் பிடிக்கும். அதுதொடர்பாக வெளிப்படையாக கூற முடியாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com