ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: முதலிடத்தை நோக்கி ஸ்மித்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: முதலிடத்தை நோக்கி ஸ்மித்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறார். முதலிடத்தில் இந்திய


ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறார். முதலிடத்தில் இந்திய கேப்டன் கோலி நீடித்து வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி, அவ்வப்போது டெஸ்ட், ஒருநாள், டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலில் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 
ஆஸி. வீரர் ஸ்மித், ஆஷஸ் தொடரில் சிறப்பாக ஆடிய நிலையில் 913 புள்ளிகளுடன் நியூஸி கேப்டன் கேன் வில்லியம்ஸனை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் மற்றொரு இந்திய வீரர் புஜாரா நான்காம் இடத்தில் உள்ளார். இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னேவும் 8-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் 6, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 9-ஆம் இடங்களில் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள்:  பந்துவீச்சாளர்களில் ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் வலுவாக முதலிடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா 5-ஆம் இடத்துக்கு முன்னேறினார். அஸ்வின் தொடர்ந்து 10-ஆவது இடத்திலேயே உள்ளார்.
ஆல்ரவுண்டர்களில் மே.இ.தீவுகளின் ஜேஸன் ஹோல்டர், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன், ஜடேஜா தொடர்ந்து முதல் மூன்றிடங்களில் உள்ளனர்.
அணிகள் பட்டியலில் இந்தியா 113 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 111 புள்ளிகளுடன் நியூஸி இரண்டாவது இடத்திலும், 108 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன. மே.இ.தீவுகளுடன் டெஸ்ட் தொடரை 1-0 என இழந்தாலும் இந்தியா, முதலிடத்தை இழந்து விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com