சர்வதேச வாள் சண்டைப் போட்டி: வாலாஜாபாத் இளைஞர் தேர்வு

மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாள் சண்டைப் போட்டியில் வாலாஜாபாத்தைச்  சேர்ந்த  இளைஞர்  சர்வதேசப் போட்டிக்குத்  தேர்வு  செய்யப்பட்டுள்ளார். 
சர்வதேச வாள் சண்டைப் போட்டி: வாலாஜாபாத் இளைஞர் தேர்வு


மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாள் சண்டைப் போட்டியில் வாலாஜாபாத்தைச்  சேர்ந்த  இளைஞர்  சர்வதேசப் போட்டிக்குத்  தேர்வு  செய்யப்பட்டுள்ளார். 
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த ஜெபஸ்டின் மகன் ஜோசப் சுரேஷ் (33). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த ஜூலை 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகம் சார்பில் வாள்சண்டைப்போட்டியில்  கலந்து கொண்டார்.
தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 26 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்றிருந்தனர். இப்போட்டியில் ஜோசப் சுரேஷ் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் ஒரு தங்கம், இரு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றதுடன் வரும் அக்டோபர் மாதம் ஜெர்மனியில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து  ஜோசப் சுரேஷ் கூறியது:  மாற்றுத்திறனாளிகளுக்கான வாள்வீச்சுப் போட்டியில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரியை தோற்கடிக்க வேண்டும்.
அவ்வாறு நடைபெற்ற போட்டியில்  தமிழகத்தின் சார்பில் 11 பேர் பங்கேற்றதில் 4 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர். அந்த நால்வரில் நானும் ஒருவன்.
  வாள் சண்டைப் போட்டியில் 3 பிரிவுகளில் ஒரு தங்கமும், இரு வெள்ளிப் பதக்கமும் எனக்கு கிடைத்தது. வரும் அக்டோபர் மாதம் ஜெர்மனியில் நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள அரசு செலவில் செல்கிறேன்.  அதிலும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்.
என்  தந்தை கொடுத்த ஊக்கமே வெற்றிகளைக் குவிக்க காரணம் என்றும் அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com