மே.இ.ஏ அணி பயிற்சி ஆட்டம் இந்தியா 200 ரன்கள் முன்னிலை

மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 200 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.


மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 200 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆக. 22-ஆம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. 
கூலிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3 நாள்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297/5 ரன்களை எடுத்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மே.இ.தீவுகள் 56.1 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் கவம் ஹாட்ஜ் 51, ஜஹ்மர் ஹாமில்டன் 33 ஆகியோர் மட்டுமே ஒரளவு ரன்களை சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இந்தியா அபார பந்துவீச்சு: இஷாந்த் சர்மா 3-21, உமேஷ் யாதவ் 3-19, குல்தீப் யாதவ் 3-35 ஆகியோர் அபாரமாக பந்துவீசி மே.இ.தீவுகள் ஏ அணியை நிலைகுலையச் செய்தனர்.
இந்தியா 84/1: இரண்டாம் நாளான திங்கள்கிழமை ஆட்ட நேர முடிவில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 35 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை குவித்துள்ளது. மயங்க் அகர்வால் 13 ரன்களுடன் வெளியேறிய நிலையில், ரஹானே 20, ஹனுமா விஹாரி 48 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
மே.இ.தீவுகள் ஏ அணியைக் காட்டிலும் இந்தியா 200 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பயங்கரவாத மிரட்டல்: இந்திய அணிக்கு தீவிர பாதுகாப்பு
பயங்கரவாத மிரட்டல் எதிரொலியாக மே.இ.தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரபூர்வ இ-மெயிலுக்கு வெள்ளிக்கிழமை  வந்த செய்தியில் இந்திய அணி கண்டிப்பாக தாக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
பிசிபி உடனே அந்த இ-மெயிலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசிக்கு அனுப்பியது. 
எந்த பயங்கரவாத அமைப்பு மிரட்டியது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. 
இந்த செய்தி, பிசிசிஐக்கும் அனுப்பப்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்படுவர் என இ-மெயிலில் கூறப்பட்டிருந்தது. 
இதுதொடர்பாக பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி கூறுகையில்:  மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். மும்பை காவல்துறையும் இப்பிரச்னை தொடர்பாக இந்திய தூதரகத்திடம் விளக்கியுள்ளது. 
மேலும் அணி வீரர்களுக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இந்திய அணிக்கு வந்த இ-மெயில் மிரட்டல் வெறும் புரளி எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com