ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: இறுதிச் சுற்றில் இந்தியா

ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய மகளிர், ஆடவர் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
சீன வீராங்கனைகளிடம் இருந்து பந்தை பறிக்க முயலும் இந்திய வீராங்கனைகள்.
சீன வீராங்கனைகளிடம் இருந்து பந்தை பறிக்க முயலும் இந்திய வீராங்கனைகள்.


ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய மகளிர், ஆடவர் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
2020 டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி தகுசிச் சுற்றுக்கு தயாராகும் வகையில் ஆடவர், மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
மகளிர் பிரிவில் இந்தியா, ஆஸி, சீனா, ஜப்பான் அணிகள் பங்கேற்று ஆடிய நிலையில், செவ்வாய்க்கிழமை சீனா-இந்தியா இடையே நடைபெற்ற கடைசி ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது. 
இதன் மூலம் இந்திய அணி அப்பிரிவில் 5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஆஸி.-ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டமும் 2-2 என டிராவில் முடிந்தது. புதன்கிழமை இறுதி ஆட்டத்தில் ஜப்பான்-இந்தியா மோதுகின்றன.
ஆடவர் பிரிவு: ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் மன்தீப் சிங்கின் அபார ஹாட்ரிக்கால் 6-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா. 9, 29, 30-ஆவது நிமிடங்களில் மன்தீப் சிங் கோலடித்தார். ஏனைய கோல்களை நீலகண்ட சர்மா, நீலம் சஞ்சீப், குர்ஜந்த் சிங் பெற்றுத் தந்தனர். இந்தியா 2-ஆவது இடத்துடன் இறுதிக்குள் நுழைந்தது. 
புதன்கிழமை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மோதுகிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com