துளிகள்...


பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தியா புளு மற்றும் இந்தியா கிரீன் அணிகள் இடையிலான துலிப் கோப்பை தொடக்கப் போட்டி, முதல் இன்னிங்ஸ் கூட முடிக்கப்படாத நிலையில், தொடர் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிரப்பட்டது. 


நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன், இலங்கை வீரர் அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் பந்துவீசும் முறை குறித்து புகார் எழுந்துள்ளதால் விசாரணை நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.


யுஎஸ் ஓபன் தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-1, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் சலைன் போனவென்டரை வீழ்த்தினார். 


23 வயதுக்குட்பட்ட வங்கதேச கிரிக்கெட் அணியுடன் ராய்ப்பூரில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள 5 ஆட்டங்கள் தொடரில் பங்கேற்கும் அணிக்கு பிரியம் கார்க் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்தியாவுக்கு எதிராக வியாழக்கிழமை தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள இளம் மே.இ.தீவு வீரர்கள் சிறந்தவர்களாக திகழ்ந்தாலும், மனதளவில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.


இந்திய அணியில் தான் இடம் பெறாத காலத்தில், நேர்த்தியாகவும், சீரான அளவிலும் பந்துவீசும் பயிற்சியை முழுமையாக மேற்கொண்டதாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்தார்.


இஸ்லாமாபாதில் நடைபெறவுள்ள இந்திய-பாகிஸ்தான் டேவிஸ் கோப்பை ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஏஐடிஏ-ஐடிஎப் இடையே நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம், இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com