உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக ஆண்டிகுவாவில் வியாழக்கிழமை தொடங்கும் மே.இ.தீவுகளுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தை
தீவிர ஆலோசனையில் கோலி, சாஸ்திரி.
தீவிர ஆலோசனையில் கோலி, சாஸ்திரி.


இன்று மே.இ.தீவுகளுடன் முதல் டெஸ்ட் துவக்கம்
 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக ஆண்டிகுவாவில் வியாழக்கிழமை தொடங்கும் மே.இ.தீவுகளுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி என எதிர்பார்ப்பு எழுந்துளது.
மொத்தம் 72 ஆட்டங்களைக் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதன்முறையாக நடத்தப்படுகிறது. ஏற்கெனவே ஆஸி-இங்கிலாந்து, நியூஸி-இலங்கை அணிகள் அதன் ஒரு பகுதியாக டெஸ்ட் தொடர்களில் ஆடி வருகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மே.இ.தீவுகளை எதிர்கொள்கிறது. 
வலுவான பேட்டிங் வரிசை: இந்திய அணியில் விராட் கோலி, கேஎல்.ராகுல், புஜாரா, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோருடன் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. எனினும் மே.இ.தீவுகள் அணியையும் சாதாரணமாக எடை போட முடியாது. ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் வலுவான இங்கிலாந்தை டெஸ்ட் தொடரில் 2-1 என வீழ்த்தியிருந்தது.
கரீபியன் தீவுகள் மைதானங்களின் பிட்ச்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு தருபவையாக உள்ளன. முதல் டெஸ்ட் நடைபெறவுள்ள ஆண்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதமாக அமையும். இது மே.இ.தீவுகள் அணிக்கு வலு சேர்க்கும். கடந்த முறை இந்த மைதானத்தில் இங்கிலாந்து ஆடிய போது இரு இன்னிங்ஸ்களிலும் 187, 132 ரன்களையே எடுத்தது. ஆனால் தற்போதைய சூழல் மாறி உள்ளது. 
கெமர் ரோச்-ஷனான் கேப்ரியல் இணை: மே.இ.தீவுகளில் கெமர் ரோச்-ஷனான் கேப்ரியல் இணை வேகப்பந்து வீச்சில் எதிரணிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அவர்களுடன் கேப்டன் ஹோல்டரும் இணைவதால் வலுவான பந்துவீச்சைக் கொண்டுள்ளது.
பிட்ச் பவுன்ஸ், வேகத்துக்கு உதவியாக அமைந்தால், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் கோலி களமிறங்கலாம். பும்ரா, ஷமி, இஷாந்த் ஆகியோரும், சுழற்பந்தில் குல்தீப் அல்லது அஸ்வின் ஆகியோர் ஆடுவர்.
ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா ஆடும் பட்சத்தில் ரோஹித் அல்லது ரஹானே ஆகியோரில் ஒருவர் நீக்கப்படுவர். கூடுதல் பேட்ஸ்மேன் சேர்க்க முடிவு செய்தால், இருவரும் ஆடும் வாய்ப்புள்ளது.
மேலும் மே.இ.தீவுகள் ஒருநாள், டி20 ஆட்டங்களில் சிறப்பாக ஆடுகின்றனர். டெஸ்ட் ஆட்டங்களில் இன்னும் முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. இளம் வீரர்கள் ஷாய் ஹோப், ஜான் கேம்பல், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கில் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
ராஸ்டான் சேஸ் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்குகிறார். டேரன் பிராவோவும் 52 டெஸ்ட்களில் 3500 ரன்களுடன் அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். 
ரகீம் கார்ன்வால்: புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ரகீம் கார்ன்வால் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வப்போது ஆஃப் பிரேக் பந்துவீச்சு, லோயர் மிடில் ஆர்டரில் உதவும் பேட்ஸ்மேனாகவும் அவர் அமைவார்.
புதிய சாதனை: கோலிக்கு வாய்ப்பு
முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் கேப்டன் கோலி புதிய சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே கேப்டனாக தோனி 27 டெஸ்ட் ஆட்டங்களில் வென்றுள்ளார். மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஆட்டத்தை வென்றால், தற்போது 26 ஆட்டங்கள் வெற்றியுடன் உள்ள கோலி, 27-ஆட்டங்களில்வென்று சாதனையை சமன் செய்வார்.
மேலும் ரிக்கி பாண்டிங்கின் சாதனையையும் சமன் செய்வார். கேப்டனாக பாண்டிங் 19 டெஸ்ட் சதங்களை விளாசியள்ளார், முதல் டெஸ்டில் கோலி சதமடிக்கும் பட்சத்தில் அந்த சாதனையையும் சமன் செய்வார் எனத் தெரிகிறது.
இன்றைய ஆட்டம்
இந்தியா-மே.இ.தீவுகள்   
இடம்: ஆண்டிகுவா
நேரம்: இரவு 7.00

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com