ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: இந்தியா சாம்பியன்

ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியுடன் இந்திய ஆடவர் அணி பட்டத்தைக் கைப்பற்றியது. அதே போல் மகளிரணியும் சாம்பியன் பட்டம் வென்றது.
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணியினர்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில் டெஸ்ட் போட்டிகள் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர், மகளிர் 2 பிரிவிலும் இந்தியா இருதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த நியூஸிலாந்து அணியை எதிர்கொண்டது இந்தியா. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், ஆட்டம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 7, ஷம்ஷேர் சிங 18, நிலகண்ட சர்மா 22, குர்சாஹிப்ஜித் சிங் 26, மந்தீப் சிங் 27ஆவது நிமிடங்களில் கோலடித்தனர். தாக்குதல் ஆட்டத்துடன், தற்காப்பு ஆட்டத்தையும் இந்திய அணி பின்பற்றியதால், நியூஸிலாந்து அணியால் பதில் கோலடிக்க முடியவில்லை.  
மகளிர் அணியும் சாம்பியன்: பின்னர் நடைபெற்ற மகளிர் இறுதி ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றியது. 11-ஆவது நிமிடத்தில் நவ்ஜோத்தும், 33-ஆவது நிமிடத்தில் லால்ரேமிசியாமியும் கோலடித்தனர். ஜப்பான் தரப்பில் 12-ஆவது நிமிடத்தில் மினாமி பதில் கோலடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com