சிறந்த வீரர்களுக்கு தகுதிச் சுற்று நடத்தக் கூடாது: மேரி கோம்

சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு தகுதிச் சுற்றுகளை நடத்தக் கூடாது என உலக குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம் வலியுறுத்தியுள்ளார்.
சிறந்த வீரர்களுக்கு தகுதிச் சுற்று நடத்தக் கூடாது: மேரி கோம்


சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு தகுதிச் சுற்றுகளை நடத்தக் கூடாது என உலக குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் புதன்கிழமை கூறியதாவது: 
சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு தங்கள் திறமையை நிரூபித்தவர்கள் தகுதி சுற்றில் பங்கேற்குமாறு வற்புறுத்தக் கூடாது.
நேரடியாக தொடர்புடைய போட்டிகளில் அவர்களை அனுப்ப வேண்டும். குத்துச்சண்டை சம்மேளனம் எதிர்காலத்தில் இந்நிலையை முழுவதும் மாற்ற வேண்டும். பாட்மிண்டன் விளையாட்டில் சிந்து அல்லது சாய்னாவுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படுகிறதா என பார்க்க வேண்டும்.
ஏற்கெனவே உலக சாம்பியன் போட்டிக்கான தேர்வில் சம்மேளனமே முடிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்தேன். தகுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டுமா என்பதை பிஎப்ஐ அறிவிக்கும் என்றார் மேரி.
ரஷியாவில் வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் உலக சாம்பியன் போட்டிகள் நடக்க உள்ள நிலையில், 51 கிலோ எடை பிரிவில் மேரியின் போட்டியாளரான நிகாத் ஜரீனுக்கு தகுதி ஆட்டம் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக அவர் பிஎப்ஐக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com